திருச்சிற்றம்பலத்துல தனுஷ் ஒரு வசனம் பேசுவார்ல, என்னோட உலகம் வேற உன்னோட உலகம் வேறனு. அதுபோல இனிமே சோஷியல் மீடியாவுல நூறு நாளைக்கு காவேரி பிரச்சினை, அண்ணாமலை அட்ராசிட்டி, எடப்பாடி இலைகள், பன்னீர் பல்புகள் எல்லாத்தையுமே கொஞ்சம் ஓரங்கட்டி பிக் பாஸ், பிக் பாஸ்னே உருட்டிக்கிட்டிருப்பாங்க.
இதுல என் டவுட் என்னன்னா.., பிக் பாஸ் கமல் எப்படி கட்சி வேலை செய்யப் போறாருனுதான். வழக்கம்போல பிக் பாஸ் மூலமாவே பிரச்சாரமும் பண்ணிடுவார்னு நினைக்கிறேன்.
நீங்க அப்டேட் பாருங்க
தர்மஅடி தர்மலிங்கம்
அதிமுக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம் – கே.பாலகிருஷ்ணன்
ஆமாமா… அதிமுகவை எதிர்க்காட்டி கூட்டணியில சீட் கிடைக்காதே..?!
வசந்த்
மாமியார் மருமகள் சண்டைக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மாமனார் மாதிரி ஆகிவிட்டது தமிழக பாஜக.
வந்தே பாரத் 😂😂 pic.twitter.com/PG2TPBErPJ
— கல்கி குமார் (@kalgikumaru) October 1, 2023
balebalu
பிரபல ரவுடி பாஜக வில் இணைந்தது எனக்கு தெரியாது – அண்ணாமலை
IPS லயும் Zero Percentile Cutoff இருந்திருக்கு போல
சரவணன். 𝓜
“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது” – அண்ணாமலை
பாவம்.. இவரை யாரு உரிச்சாங்கன்னு தெரியலையே?
கடைநிலை ஊழியன்
to monday –
அது என்ன வாரம் வாரம் வந்தா பயந்துருவோமா.. நாளைக்கு எங்களுக்கு லீவ்.. இப்ப என்ன பண்ணுவீங்க.
மயக்குநன்
அகில இந்திய கட்சியான பாஜக, தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவது நியாயமா?- கே.பாலகிருஷ்ணன்.
‘இண்டியா’ கூட்டணி கட்சியான காங்கிரஸ், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம்னு கைவிரிச்சது மட்டும் நியாயமாக்கும்..?!
ச ப் பா ணி
Monday மார்னிங் ட்ராபிக்கில் மாட்டுறதும் .. Sunday ஈவ்னிங் டீ மார்ட் போறதும்..ஒன்னு
balebalu
2000ரூபாய் நோட்டுக்களை மாற்ற அக்டோபர் 7ம் தேதிவரை அவகாசம்-ரிசர்வ் வங்கி
வாங்க ஏழைகளா
நீங்க எல்லாம் ரொம்ப பிசி ன்னு தெரியும் அதுக்காக தான் இந்த கால நீட்டிப்பு
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தீபாவளி விளம்பரம் எல்லாம் வர ஆரம்பிச்சுருச்சு.. நான் இன்னும் பொங்கல் செலவுக்கு வாங்கின கடனே கட்டி முடிக்கலைடா.
தர்மஅடி தர்மலிங்கம்
அண்ணா, ஜெயலலிதாவை தாண்டி அதிமுக-பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது – டிடிவி தினகரன்
ஒருவேளை… உங்களையும் கூட்டணியில சேர்த்துக்க சொன்னதால இருக்குமோ..??
மயக்குநன்
எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி, தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது மத்திய அரசு!- உதயநிதி.
அப்ப… மக்களவைத் தேர்தலிலும் ‘ஒத்தச் செங்கல்’ பிரச்சாரம் உண்டுனு சொல்லுங்க..!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பிக் பாஸ்” சீசன் 7: ஒரே வாசல், ஒரே கிச்சன், 2 வீடு… அலப்பறை ஆரம்பம்!
குன்னூர் விபத்து : நேரில் ஆறுதல் கூறிய ஆ.ராசா