குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை என்சிபி அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 28) பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து என்சிபி துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் வெளியிட்ட அறிக்கையில், “குஜராத் மற்றும் ராஜஸ்தானில் போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் ரகசியமாக இயங்கி வருவதாக தகவல்கள் கிடைத்தது.
இந்த ஆய்வகங்களை கண்டறிய குஜராத் மற்றும் என்சிபி தலைமையக செயல்பாட்டு பிரிவின் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை தொழில்நுட்ப உதவியுடன் கடந்த மூன்று மாதமாக ஆய்வு செய்தோம்.
இதனையடுத்து ஏப்ரல் 27-ஆம் தேதி ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான், குஜராத்தின் காந்திநகர் மாவட்டம் ஆகிய மூன்று இடங்களில் சோதனை நடத்தினோம்.
இந்த சோதனையின் போது ஏழு பேரை கைது செய்தோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சோதனையில் 50 கிலோ எபிட்ரின், 149 கிலோ மெபட்ரோன், 200 லிட்டர் அசிட்டோன் ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
60 வயதில் உலக அழகி பட்டம்: மகுடம் சூடிய மரிச ரோட்ரிகுயஸ்
G.O.A.T : செகண்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்?
போதைப் பொருளின் மையம் தமிழகம்தான்னு சொல்றவைங்கள நீங்க பாத்திங்களா?