பிபிசி ஆவணப்படம்: மாணவர்களுக்கு ஜே.என்.யு உத்தரவு!

இந்தியா

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என மாணவர்களுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

2002ல் குஜராத் மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி இருந்தார். இந்த கலவரம் குறித்து பிபிசி கடந்த 17ஆம் தேதி ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது.

“இந்தியா – மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் பிரதமர் பற்றி எதிர்மறை கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

இதற்குக் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு பிபிசியின் ஆவணப் படத்தை யூடியூப், ட்விட்டர், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட கடந்த 18ஆம் தேதி தடை விதித்தது.

இதன்காரணமாக யூடியூப் உள்ள சமூக வலைதளங்கள் பிபிசி ஆவணப்படம் தொடர்பான லிங்க்குகளை நீக்கி வருகின்றன.

இந்த சூழலில் பிபிசி ஆவணப்படத்தை மாணவர்களில் ஒரு குழுவினர் இன்று இரவு 9 மணிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் என ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்த ஆவணப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள மாணவர்கள் குழுவினரிடம், ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதுபோன்ற அங்கீகாரமற்ற செயல்பாடு பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களது திட்டத்தை ரத்து செய்யுமாறு உறுதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பாகமே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை இன்று பிபிசி வெளியிடுகிறது.

பிரியா

மாரடைப்பால் இயக்குனர் மரணம்!

கிச்சன் கீர்த்தனா: பிரெட் அவல் தோசை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.