case against dmk NEET signature movement

திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் : உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

இந்தியா தமிழகம்

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 2) தள்ளுபடி செய்தது. case against dmk NEET signature movement

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், ஆளும் கட்சியான திமுக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. 50 நாள் 50 லட்சம் கையெழுத்துகள் என்று தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வரை 72 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

தொடர்ந்து கையெழுத்துகள் பெறப்பட்டு வருகின்றன. இந்த இயக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், ‘பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு எதிராக பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களிடமும் கையெழுத்து பெறப்படுகிறது. மாணவர்களின் பெற்றோரின் அனுமதியின்றி இப்பயிற்சி நடைபெறுகின்றன.

அரசியலமைப்பின் 19 வது பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும், அரசியல் கட்சிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் வாக்களிக்கும் உரிமையைக் கூடப் பெறாத வயதிலிருக்கும் பள்ளி மாணவர்களிடம் இதுபோன்று கையெழுத்தைப் பெற முடியாது. இந்த கையெழுத்து இயக்கம் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய மாணவர்களை பாதிக்கக்கூடும் .

எனவே பள்ளி வளாகங்களில் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் முன்பு இன்று (ஜனவரி 2) விசாரணைக்கு வந்தது.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழக்கு இதுவல்ல என நாங்கள் கருதுகிறோம்.

இந்த காலத்துப் பிள்ளைகள் அப்பாவிகள் அல்ல. சிறந்த அறிவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் விரும்பி கையெழுத்திடுகிறார்கள் என்றால் அதை எப்படி தடுக்க முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வு என்பது பான் இந்தியா அளவில் நடத்தப்படக் கூடியது. இந்த பிரச்சாரத்தால் அது பாதிக்கப்படாது” என்றும் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ!

மழை பாதிப்பு… இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை!

ரூ.120 லட்சம் கோடி… தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதி : பிரதமர் பேச்சு!

case against dmk NEET signature movement

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் : உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

  1. இனியாவது மக்களை ஏமாற்றும் வேலை தொடருமா? தொடராதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *