அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் இன்று (மே 12) கொண்டாடி வருகிறார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில், “இன்று பிறந்தநாள் கொண்டாடும் எடப்பாடி பழனிசாமிக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நன்னாளில் மகிழ்ச்சியாகவும், பூரண உடல்நலத்துடனும் இருக்கநான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.” என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான திரு @EPSTamilNadu அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @EPSTamilNadu அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 12, 2024
இதனைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வளங்களும், ஆரோக்கியமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.@EPSTamilNadu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வளங்களும், ஆரோக்கியமும் பெற்று நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) May 12, 2024
அதிமுகவின் கூட்டணிக் கட்சியான புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, “தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாகிய அன்பு சகோதரர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்— TVK Vijay (@tvkvijayhq) May 12, 2024
இதுத்தொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது, “அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் 2024: எந்தெந்த அணிக்கு எத்தனை புள்ளிகள்? CSK வின் சாய்ஸ் என்ன?
”அன்னையர் தினம்” – வாழ்த்திய அரசியல் தலைவர்கள்!