இஞ்சி சாறு உட்கொள்வது, உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இஞ்சி சாறு உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம். Benefits of drinking ginger juice
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
இஞ்சியில் ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது இது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, இது வீக்கம், அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.
சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு
எக்ஸ்பெக்டோரண்ட் பண்புகள் இஞ்சியில் உள்ளதால் இஞ்சி தொண்டை புண்களை ஆற்ற உதவுகிறது. இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது. சுவாச பிரச்சினைகளை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மாதவிடாய் வலி
இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது. மாதவிடாய் வலியை இஞ்சி ஒரளவிற்கு குறைக்கும். மாதவிடாய் தொடர்பான பிற அசௌகரியங்களைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் எடை குறைப்பு
இஞ்சி எடுத்துக்கொள்வதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரித்து, பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எப்படி எடுத்துக்கொள்வது
சூடான நீரில் காலையும் மாலையும் இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். தினசரி குடிக்கும் டீயில் இஞ்சி தட்டுப்போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அல்லது சாப்பாட்டுடன் இஞ்சியை சேர்க்க விரும்புகிறவர்கள் இஞ்சியை துவையல் அரைத்து சாப்பிடலாம். தேன், எலுமிச்சை சாறு அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் தொண்டை வலியை ஆற்ற உதவுகிறது இஞ்சி.
இப்படி ஏராளமான நன்மைகள் கொண்ட இஞ்சியை ஏதேனும் ஒரு வகையில் நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கலைஞர் 100 விழாவுல புது சி.எம் : அப்டேட் குமாரு
கலைஞர் 100 விழாவில் பங்கேற்றதன் காரணம் : ஸ்டாலின் விளக்கம்!
”சினிமாவை ஆயுதமாக மாற்றியவர் கலைஞர் தான்”: சூர்யா
Benefits of drinking ginger juice