கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி காலை சென்னையில் உள்ள 13 பள்ளிகளுக்கு ஒரே ஐபி முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதுதொடர்பாக, பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துப் பள்ளி வளாகங்களையும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், மத்திய அரசு மூலமாக இண்டர்போல் ஏஜென்சி உதவியை நாடினார்கள். இண்டர்போல் ஏஜென்சி சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ-மெயில் நிறுவனத்திடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார்கள்.
சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களும் பெல்ஜியம் நாட்டு சர்வர்களில் இருந்து அனுப்பப்பட்டது என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த இ மெயில் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
பெல்ஜியம் நாட்டு ஐபி முகவரி, சர்வர் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த நாட்டிடம் விவரங்களை கேட்க இண்டர்போல் ஏஜென்சி முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த நபர் பெல்ஜியம் நாட்டில் இருந்து செயல்படுகிறாரா? விபிஎன் (Virtual private network) சேவையை பயன்படுத்தி இ-மெயில் அனுப்பினாரா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தளபதி 69: இந்த ரெண்டு பேருல… விஜய் யாரை செலக்ட் பண்ணப்போறாரு?
பொங்கல் வேட்டி, சேலை ஊழல் குறித்து விஜிலென்ஸில் புகார்: அண்ணாமலை