இன்று குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ரிச் முந்திரி புலாவ் ரெசிப்பி உதவும். செய்வது சுலபம். குறிப்பாக மதிய உணவாகக் குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி – 2 கப்
முந்திரி – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல் (மிகவும் பொடியாக நறுக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் உதிராக வடித்த சாதம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். இதற்கு உருளைக்கிழங்கு – பட்டாணி குருமா சூப்பர் காம்பினேஷன்.
உலகிலேயே இரண்டாவது மெதுவான நகரத்தை பிடித்த பெங்களூரு: ஏன் தெரியுமா?
திரிபுரா சட்டசபை தேர்தல் நிறைவு: பதிவான வாக்குகள் எவ்வளவு?