தளபதி 69 படத்திற்கான இறுதி ரேஸில் இரண்டு இயக்குநர்கள் முன்னணியில் இருக்கின்றனர். இருவரில் விஜய் யாரை தேர்வு செய்யப்போகிறார்? என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.
‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியை அறிவித்த விஜய் தன்னுடைய 69-வது படத்துடன், சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
அவரது ரசிகர்களால் ஆரம்பத்தில் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், தற்போது கடைசி படம் மாஸ் ஆக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் விஜய் அவரின் அடுத்த இயக்குநராக யாரை அறிவிக்கப் போகிறார்? என்பது குறித்து இதுவரையும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
தற்போது விஜயின் சாய்ஸில் கார்த்திக் சுப்புராஜ், ஹெச்.வினோத் இருவரும் இருக்கின்றனராம். தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான சூழ்நிலையில் இயக்குநர் மட்டும் இன்னும் இழுபறியாகவே உள்ளது.
இந்த நிலையில் கடைசி படத்தில் ஹெச்.வினோத் அவரை இயக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார்த்திக்கை விட வினோத் விஜய்க்கான மாஸ் காட்சிகளை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் இதற்கான பின்னணியாக உள்ளது.
அதன்படி அரசியல்ரீதியான கதையில் ஹெச்.வினோத், தளபதி விஜய் இருவரும் கைகோர்க்க உள்ளனராம். ஏப்ரல் கடைசியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், விஜய் அடுத்த இயக்குநர் குறித்து விரைவில் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் வேட்டி, சேலை ஊழல் குறித்து விஜிலென்ஸில் புகார்: அண்ணாமலை
3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு!