லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று(மே24) நடைபெற்று வரும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து கேமரூன் கிரீனும்-சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
11 வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கேமரூன் கிரீன் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ரன்கள் விளாசினார்.
திலக் வர்மா, டிம் டேவிட் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்த உதவினர். 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்திருந்தது மும்பை இந்தியன்ஸ்.
திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளையும் , யஷ் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மோஷின் கான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மோடியிடம் செங்கோலை வழங்குவதில் மகிழ்ச்சி: திருவாவடுதுறை ஆதீனம்!
எலிமினேட்டர் சுற்றில் மும்பை-லக்னோ: வெளியேறப்போவது யார்?