IPL வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்…விவரம் இதோ!

விளையாட்டு

2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் வரும் மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் ஐபிஎல் போட்டிகளில் 4 முறை கோப்பையை கைப்பற்றிய எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதும் கடைசி லீக் ஆட்டங்கள் பெங்களூரு மைதானத்தில் மே 21-ம் தேதி நடைபெறும்.

இந்த 16-வது சீசனில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில், இதுவரை நடைபெற்றுள்ள இந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ஸ்கோர் விளாசிய டாப் 5 வீரர்கள் யார் யார் என்பதை காண்போம் வாருங்கள்:

விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி.

அதிரடி நாயகனான விராட் கோலிக்கு ஒரு முறை கூட அணியை சாம்பியனாக்க முடியாமல் போனது சோகமே. ஆனாலும், இதுவரையிலான ஐபிஎல் தொடரில் அதிக ஸ்கோரை பதிவு செய்து நம்பர் 1 இடத்தில் உள்ள வீரர் கோலி தான்.

2008ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை மொத்தம் 223 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கோலி.

அதில் மொத்தம் 6,624 ரன்களை அவர் பதிவு செய்துள்ளார். ஓர் ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் 113 ஆகும்.

ஸ்டிரைக் ரேட் 129.14. இதுவரை கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 சதங்களையும், 44 அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார்.

ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 5129.

ஷிகர் தவான்

டெக்கான் சார்ஜஸ், டெல்லி கேபிட்டல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல்-இல் விளையாடியுள்ளார் ஷிகர் தவான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிலை போல் களத்தில் இறங்கினால் பந்தை நான்காபுறமும் பறக்கவிடுபவர் தவான்.

Top 5 Highest Run Scorers in IPL

அவர் 2008 முதல் 2022 வரையிலான ஐபிஎல் தொடர்களில் 206 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.

மொத்தம் 6244 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக அவர் 106 ரன்களை விளாசியுள்ளார். அதுவும் நாட் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. தவன், 4924 பந்துகளை எதிர்கொண்டு 2 சதங்கள், 47 அரை சதங்கள், 701 பவுண்டரிகள், 136 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டெல்லி டேர்டெவில்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Top 5 Highest Run Scorers in IPL

இவர் 2009 முதல் 2022 வரை 162 ஐபிஎல் டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். அதில் 4180 பந்துகளை எதிர்கொண்டு 5881 ரன்களை பதிவு செய்துள்ளார்.

இவரது தனிநபர் அதிகபட்சம் 126 ரன்கள் ஆகும். ஸ்டிரைக் ரேட் 140.69. மொத்தம் 4 சதங்கள், 55 அரை சதங்கள் பதிவு செய்திருக்கிறார். 577 பவுண்டரிகள், 216 சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் டேவிட் வார்னர்.

ரோகித் சர்மா

இந்த லிஸ்ட்டில் 4 வது இடத்தில் உள்ளார் ரோகித் சர்மா. இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்துள்ளார்.

2008 முதல் 2022 வரை 227 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி, 5879 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா . தனிநபராக அதிகபட்சம் 109 ரன்கள் எடுத்து நாட்அவுட் ஆகாமல் இருந்துள்ளார்.

Top 5 Highest Run Scorers in IPL

4526 பந்துகளை எதிர்கொண்ட இவரது ஸ்டிரைக் ரேட் 129.89. 1சதம், 40 அரை சதங்களை பதிவு செய்துள்ள ரோகித், 519 பவுண்டரிகளையும், 240 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா

இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் சென்னை சூப்பர் கிங்க்ஸ்-ன் சுரேஷ் ரெய்னா.

குஜராத் லயன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 2008 முதல் 2021 வரையிலான ஐபிஎல்-இல் 205 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார்.

Top 5 Highest Run Scorers in IPL

மொத்தம் 4043 பந்துகளை எதிர்கொண்ட ரெய்னா, 5528 ரன்களை பதிவு செய்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 100 நாட்அவுட். ஸ்டிரைக் ரேட் 136.73. 1 சதம், 39 அரை சதம் விளாசியிருக்கிறார்.

506 பவுண்டரிகளையும், 203 சிக்ஸர்களையும் சுரேஷ் ரெய்னா அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சாமை – கறிவேப்பிலை வற்றல்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.