லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக வெளியேறினாலும், க்ருனால் பாண்டியா தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மேட்ச் வின்னரை லக்னோ அணி உருவாக்குவதால், எந்த வீரர் எப்படி விளையாடுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது.
இருப்பினும் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியை ஒப்பிடும் போது லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சு அபாரமாக உள்ளது. க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னாய், அமித் மிஸ்ரா என்று அபாயகரமான வீரர்கள் இருக்கிறார்கள்.
எனவே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும்..வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடர்ந்து படியுங்கள்