ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பை டி20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முடிவில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த நிலையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இன்றைய ஆசியக் கோப்பை 2022 போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி அபார திறனையும், திறமையையும் வெளிப்படுத்தி உள்ளது.

அவர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

ராஜ்

ஐசிசி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *