இந்திய தென்னாப்பிரிக்கா அணியிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு 279 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
டி20 தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து முதலாவது ஒரு நாள் போட்டியில் ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இன்று (அக்டோபர் 9) இந்திய தென்னாப்பிரிக்கா அணியிடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் ஜன்னிமன் மாலன் களமிறங்கினர்.
இந்தியப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சில் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய மாலனும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஹென்ரிக் மற்றும் மார்க்ரம் ஜோடி சிறப்பாக விளையாடியதன் மூலம் அரைசதத்தைக் கடந்து அசத்தினர். 74 ரன்களில் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கிளாசன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். 30 ரன்கள் எடுத்திருந்த கிளாசன் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார்.
37 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதத்தைக் கடந்து அதிரடியாக விளையாடி வந்த மார்க்ராம் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.
40 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் பவுண்டரிகளை அடிக்க முயன்ற தென்னாப்பிரிக்கா அணி ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் பவுண்டரிகளை அடிக்க முடியாமல் திணறியது.
இருப்பினும் 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் ஒவ்வொரு ஓவர்களிலும் இந்திய வீரர்கள் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியம்.
இந்திய அணி 279 ரன்களை எடுத்து வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோனிஷா
கனிமொழிக்கு பதவி: அறிவித்த 10 நிமிடத்தில் போஸ்டர்கள்!
பிக்பாஸ் 6 : ஆரம்பிக்கும் போதே ஆர்மியா?