ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனை படைத்த ரோகித் சர்மா
Rohit Sharma: 2024 ஐபிஎல் தொடரில், இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு தனது சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 1) முதன்முறையாக களமிறங்கியது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
ஆனால் எதிர்த்து போட்டியிட்ட ராஜஸ்தான் அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் சஹாலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 125 ரன்களுக்கு சுருண்டது.
அதன்பின்னர் ரியான் பராக்கின் அதிரடி அரைசதத்தால் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரோகித் சர்மா மோசமான சாதனை!
இந்த போட்டியில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் ரோகித் சர்மா.
ராஜஸ்தான் அணிக்காக ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட அவர், தனது முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து கோல்டன் டக் அவுட் ஆனார்.
இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் இதுவரை 17 முறை டக் அவுட் ஆகி, அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
https://twitter.com/PranavMatraaPPS/status/1774810624620454035
ஐபிஎல் தொடர்களில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்:
1) ரோகித் சர்மா – 17
2) தினேஷ் கார்த்திக் – 17
3) கிளென் மேக்ஸ்வெல் – 15
4) பியூஷ் சாவ்லா – 15
5) மன்தீப் சிங் – 15
6) சுனில் நரேன் – 15
இப்போட்டியில் மிரட்டலாக பந்துவீசிய போல்ட், தனது அடுத்த பந்திலேயே அடுத்து களமிறங்கிய நமன் திர் விக்கெட்டை கைப்பற்றினார். பின், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய டிவால்ட் பிரேவிஸையும் கோல்டன் டக்-அவுட் ஆக்கினார்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில், புவனேஷ்வர் குமாரின் சாதனையை போல்ட் சமன் செய்துள்ளார். ஐபிஎல் தொடர்களில், இதுவரை இருவருமே முதல் ஓவரில் 25 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த இலக்கை எட்ட புவனேஷ்வர் குமார் 116 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்ட நிலையில், போல்ட் வெறும் 80 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார் என்பத் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தொடரும் காட்டு யானை தாக்குதல் : மூன்று மாதங்களில் ஐந்தாவது மரணம்!