சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் 232 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 10) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய, சுப்மன் – சுதர்சன் ஜோடி, சிஎஸ்கே வீரர்கள் பந்துவீச்சை எல்லைக்கோட்டிற்கு பறக்கவிட்டனர். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரிக்க ஆரம்பித்தது.
10-ஆவது ஓவரில் குஜராத் அணி 100 ரன்களை கடந்தது. சுப்மன் – சுதர்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் திணறினர்.
தொடர்ந்து சிக்ஸ், பவுண்டரிகளை பறக்கவிட்டனர். 17-ஆவது ஓவரில் 200 ரன்களை குஜராத் தொட்டபோதும், ஒரு விக்கெட்டை கூட சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் சதம் விளாசினர்.
கடைசியாக 18-ஆவது ஓவரில் துஷார் தேஷ்பண்டே வீசிய பந்தில், சாய் சுதர்சன், சுப்மன் கில் இருவரும் அவுட்டாகி வெளியேறினர். சுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்கள் ( 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) அடித்திருந்தார். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களுடன்( 5 பவுண்டரி, 7 சிக்ஸர்) வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஷாருக்கான், வந்த வேகத்திலேயே 2 ரன்களுடன் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிறகு 231 ரன்கள் எடுத்திருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்… கவின் எமோஷனல்!
சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டாரா? நீதிமன்றத்தில் நடந்த விவாதம்!