rcb set for name change

RCB: களமிறங்கிய ‘காந்தாரா’ ஹீரோ… இனி யாராலும் ‘இத’ தடுக்க முடியாது!

விளையாட்டு

ஐபிஎல் தொடர் வருகின்ற 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்து 16 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் கோப்பை வெல்ல முடியாமல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தவித்து வருகிறது. உலகின் டாப் பேட்ஸ்மேன் ஆக திகழும் கோலி உட்பட, உலகின் அபாயகரமான வீரர்கள் பலர் இருந்தும் கூட அந்த அணியால் கோப்பை வெல்ல முடியவில்லை.

இதுவரை மூன்று முறை அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் கடந்த 7 வருடங்களாக இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. rcb set for name change

rcb set for name change

என்னதான் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்தாலும் விராட்டிற்காகவாது அந்த அணி கோப்பை வெல்ல வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்தநிலையில் பெங்களூர் அணியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழவுள்ளதாக அந்த அணி வீடியோ வெளியிட்டுள்ளது. ‘காந்தாரா’ ஹீரோ ரிஷப் ஷெட்டி நடித்திருக்கும் இந்த வீடியோவில், மூன்று எருமை மாடுகள் புல்வெளியில் நிற்கின்றன.

அந்த மாடுகளின் மீது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என தனித்தனியாக எழுதப்பட்ட  சால்வைகள் போர்த்தப்பட்டுள்ளன. இதில் பெங்களூர் என எழுதப்பட்டு இருக்கும் மாட்டினை மட்டும் ரிஷப் ஷெட்டி விரட்டி விடுகிறார். பின்னர் ”அர்த்தம் புரிந்ததா?” என அவர் கேட்பதுடன் வீடியோ முடிகிறது.

rcb set for name change

இதன் மூலம் அணியில் உள்ள பெங்களூர் என்னும் வார்த்தையை நீக்கிவிட்டு ‘பெங்களூரு’ என மாற்ற இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி உருவான போது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூர் என்றே இருந்தது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு ‘பெங்களூரு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது இருந்தே அணியின் பெயரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் 9 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளும் தங்களது பெயரினை மாற்றி விளையாடி வருகின்றன. அந்த பட்டியலில் லேட்டஸ்ட் ஆக ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இணைகிறது.

பெயரை மாற்றும் அந்த அணி கோப்பையையும் வென்றால், ரசிகர்களுக்கு அதைவிட மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது. பெயர் மாற்றத்தால் பெங்களூரு அணி வாகை சூடுமா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும். rcb set for name change

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி அல்லி

ICC Ranking: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்…இந்திய வீரர்கள் அசத்தல்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0