பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

விளையாட்டு

டெத் ஓவர்களில் பிராவோ போன்ற ஒரு வீரர் இல்லாமல் விளையாடுவது கடினமாக உள்ளது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று (ஏப்ரல் 17) நடைபெற்ற ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் கான்வே 83 ரன்களும், ஷிவம் துபே 52 ரன்களும் குவித்தனர்.

இதனை சேஸிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.

அந்த அணியில் கேப்டன் ஃபா டூ பிளெசிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) ஆகியோர் அதிரடியாக ஆடினாலும், மற்ற வீரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில், “முதல் இன்னிங்ஸில் ஒரு அணி 220 ரன்கள் அடித்தால் எதிரணியில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆட வேண்டும்.

ஃபா டூ மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அதனை செய்தனர். அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆடியிருந்தால், பெங்களூரு அணி 18வது ஓவரிலேயே வெற்றி பெற்றிருக்கும்.” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கடைசி கட்ட ஓவர்களை வீச இப்போது அணியில் உள்ள இளம் வீரர்கள் சிரமப்படுகின்றனர். முன்னதாக அதில் அனுபவம் வாய்ந்த வீரரான பிராவோ இருந்தார். அவர் இல்லாதது அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான்.

இருந்தாலும் இளம் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். பிராவோவின் கீழ் பயிற்சி பெற்று வருவது அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும்.” என்று பேசினார்.

தோனி குறிப்பிட்டது போன்று பிராவோ போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் சென்னை அணி தவித்து வருகிறது.

இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் சென்னை அணி பந்துவீச்சாளர்கள் கடைசி 5 ஓவர்களில் சராசரியாக 46 ரன்கள் கொடுத்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற போட்டியில் கூட, ஜடேஜாவை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் 10 எகானமிக்கும் மேலாக பந்துவீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

திருப்பதி தேவஸ்தானம்: போலி டிக்கெட்டுகள் விற்பனை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *