தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?

விளையாட்டு

கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று(ஏப்ரல் 24 ) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் 34 வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த தொடரில் இரு அணிகளுமே இதுவரை மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வரும் சூழலில், இனி வரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், இனி வரும் ஆட்டங்களில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஐய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த 20ம் தேதி நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

ஹைதராபாத் அணி கொல்கத்தா மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவிய டெல்லி அணி தற்போது மீண்டு வந்துள்ளது.டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்கள் டெல்லி அணியின் பலம்.

ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால், திரிபாதி, ப்ரூக், மார்க்ரம் ஆகியோர் பலமாக உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பதால் ஹைதராபாத் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடும்.

அதேநேரம், வெற்றியைத் தக்க வைக்க டெல்லி அணியும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச ஆடும் 11 வீரர்கள்:

ஹாரி ப்ரூக், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்

டெல்லி கேபிடல்ஸ் உத்தேச ஆடும் 11 வீரர்கள்:

டேவிட் வார்னர் (கேப்டன் ), பிரித்வி ஷா, பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், ஐன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா

மு.வா.ஜெகதீஸ் குமார்

அண்ணாநகர் கார்த்தி வீட்டில் ரெய்டு: திமுகவினர் போராட்டம்!

’’பாஜக குறித்து தற்போதைய தலைவர்களிடம் கேளுங்கள்’’ தமிழிசை

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *