qஅரசு நலத்திட்டங்கள் வருமான வரம்பு உயர்வு!

public

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சில நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பை தமிழக அரசு இன்று (ஜூன் 1) உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம், திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பயன்பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ, 24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்தினால் அதிக அளவு ஏழைகள் பயன்பெறுவர். எனவே திருமண நிதியுதவி திட்டத்துக்கு ரூ. 72 ஆயிரம் உயர்த்தியது போலவே, விதவை பெண்களின் குழந்தைகளுக்கு இலவச பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் திட்டம், தையல் பயிற்சி பள்ளிகளில் சேர்க்கை மற்றும் தொழிற்பயிற்சி அனுமதி போன்ற மகளிர் நலத்திட்டங்களுக்கு வருமான வரம்பை ரூ, 24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று மூன்றாம் பாலினத்தவருக்கும் இனிமேல் அவர்கள் பெறும் நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.24 ஆயிரம் முதல் 72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது

.

.

**

மேலும் படிக்க

**

.

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!](https://minnambalam.com/k/2019/05/31/66)

**

.

**

[ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!](https://minnambalam.com/k/2019/05/31/20)

**

.

**

[விமர்சனம்: என்ஜிகே](https://minnambalam.com/k/2019/06/01/10)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?](https://minnambalam.com/k/2019/05/30/79)

**

.

**

[தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!](https://minnambalam.com/k/2019/06/01/38)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *