மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 1) காலை 11.30 மணியளவில் தொடங்கியிருக்கிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. பல இடங்களில் டெபாசிட் இழந்தது. இந்நிலையில் அமமுக தலைமை, கடந்த மே 25 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில்,

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 01.06.2019 (சனிக்கிழமை) காலை10.00 மணி அளவில்,கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், சென்னை, அசோக் நகர், நடேசன் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படியே இன்று அமமுகவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், போட்டியிட்ட மக்களவை வேட்பாளர்கள், சட்டமன்ற வேட்பாளர்கள் என அனைவரும் வந்துவிட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

11.30 அளவில் அலுவலகத்துக்கு வந்த டிடிவி தினகரனை நிர்வாகிகள் வரவேற்க, ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ஏற்கனவே பல பூத்களில் அமமுகவுக்கு பூஜ்யம் வாக்குகளே பதிவானதாக தினகரன் தெரிவித்திருந்த நிலையில் அதுகுறித்த முழு விவரங்களையும் இந்தக் கூட்டத்தில் தினகரன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனவாரம் சசிகலாவை சந்தித்தது பற்றியும் அவர் விளக்கக் கூடும் என்கிறார்கள்.

தேர்தல் களத்தில் சந்தித்த அனுபவம் பற்றியும் தேர்தல் தோல்வி பற்றியும் வேட்பாளர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார் தினகரன்.

கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் இறுக்கமான முகத்தோடே இருக்கிறார்கள். குறிப்பாக வேட்பாளர்கள் கடுமையான வருத்தத்தில் இருக்கிறார்கள். பகலில் தொடங்கிய கூட்டம் மாலை வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே கூட்டத்தில் நடந்த விவரங்கள் தெரியவரும்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தலைமைச்செயலகம்: உடை அணிவதில் கட்டுப்பாடு!

.

.

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

சனி 1 ஜுன் 2019