jகிச்சன் கீர்த்தனா: வல்லாரை – பனீர் சப்ஜி

public

கீரை வகைகளில், மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் வல்லாரையில் நிறைந்திருப்பதால், ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழியே உருவானது. ஆயுர்வேதத்தின்படி, ஞாபகசக்தியை மூன்று நிலைகளாகக் கூறலாம். அவை, தகவலை உள்வாங்கிக்கொள்ளுதல் (Receiving), அவற்றை மூளையில் சரியாகப் பதிவுசெய்தல் (Recording), தேவையான நேரத்தில் அவற்றை நினைவுகூர்தல் (Recalling). இந்த மூன்று நிலைகளுக்கும் வல்லாரை உதவிபுரியும்.

**என்ன தேவை?**

வல்லாரைக் கீரை – ஒரு கட்டு

துவரம் பருப்பு – அரை கப்

தக்காளி – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி – பூண்டு விழுது, தனியாத்தூள் – தலா 2 டீஸ்பூன்

மிளகுத்தூள், கரம் மசாலாதூள் – தலா ஒரு டீஸ்பூன்

பனீர் – கால் கப்

உப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கீரையை ஆய்ந்து நறுக்கி, துவரம்பருப்பு, தக்காளி சேர்த்து தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 3 (அ) 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுக் கிளறவும். மிளகுத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கவும். எண்ணெயில் பனீரைப் பொரித்துப் போட்டு, கிளறி பரிமாறவும்.

**என்ன பலன்?**

நினைவாற்றலைப் பெருக்கும். மாலைக்கண் நோய் குணமாகும். தொழுநோய் மற்றும் பால்வினை நோய்ப் புண்களை ஆற்ற சூரணமாகச் சாப்பிடலாம். முதுமையைத் தடுக்கும். சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

[நேற்றைய ரெசிப்பி: கீரை கபாப்](https://www.minnambalam.com/k/2019/07/22/1)

**

மேலும் படிக்க

**

**[மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/22/61)**

**[ டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக அமித் ஷாவிடம் பன்னீர் புகார்!](https://minnambalam.com/k/2019/07/22/78)**

**[தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/22/23)**

**[ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/21/40)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *