மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்

மின்னம்பலம் செய்தி: தங்கத்துக்கு போன் போட்ட ஸ்டாலின்

அமமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும், தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருந்த தங்க தமிழ்செல்வன், கடந்த மாதம் ஜூன் 28ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டு அக்கட்சியில் இணைந்தார்.

திமுகவில் இணைந்த பத்து நாட்கள் பிறகு தங்கத் தமிழ்செல்வன் சத்தமில்லாமல் இருந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்திலிருந்து அமமுக ஒன்றிய செயலாளர் ஒருவர் தங்கத்தைத் தொடர்புகொண்டார். ’அண்ணா நல்லாயிருக்கீங்களா? என்னை எப்போது திமுகவுக்கு கூட்டிட்டுப் போகப் போறீங்க?’ எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு தங்கம், ‘ஒன்றியம்... நான் அவசரப்பட்டுட்டேனோன்னு நினைக்கிறேன். நீங்க இங்கே வர்றதா இருந்தா, யோசிச்சுட்டு வாங்க’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இதுபற்றி, ‘அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்’ என்ற தலைப்பில், ஜூலை 13 ஆம் தேதி, காலை 7 மணி பதிப்பில் நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் வெளியிட்டிருந்தோம்.

மின்னம்பலம் செய்தியைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அன்று இரவே தங்கத்தைத் தொடர்புகொண்டிருக்கிறார். “என்ன தங்கம்... நீங்க வருத்தத்துல இருக்கீங்கனு கேள்விப்பட்டேன். வாட்ஸப்ல செய்தியும் வந்திருக்கு. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்களுக்குனு எப்போதும் என்னிடம் தனி இடம் உண்டு. சட்டமன்றம் ஜூலை 20 ஆம் தேதி முடியுது. மறுநாள் ஜூலை 21 ஆம் தேதி, தேனியில் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. நானே வர்றேன். நாள் கம்மியாதான் இருக்கு. செஞ்சுடலாம்ல?’ என்று கேட்டிருக்கிறார்.

இதையடுத்து வருத்தங்கள் பறந்து போன தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின் உத்தரவை ஏற்று, ஒரு வார காலத்தில் மீடியா பக்கமெல்லாம் எட்டிப் பார்க்காமல், கூட்ட ஏற்பாடுகளை கவனித்தார். அதில் கலந்துகொண்ட ஸ்டாலின், கூட்டம் முடிந்த பிறகு, ‘நான் எதிர்பார்க்காத அளவுக்கு மாநாடு போல ஏற்பாடுகள் செஞ்சிருந்தீங்க’ என்று தங்கத் தமிழ்ச்செல்வனைப் பாராட்டியுள்ளார்.


மேலும் படிக்க


தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!


பதவியிலிருந்து நீக்குவேன்: நிர்வாகிகளை எச்சரித்த தினகரன்


ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அதிமுகவுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon