மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!

தளபதி உதயநிதி: தலைமை உத்தரவு!

திமுகவில் தளபதி என்று கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேல் அழைக்கப்பட்டு வந்த மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆகிவிட்டதால், அவரை இனிமேல் தளபதி என்று அழைக்கக் கூடாது என்றும், உதயநிதியை தளபதி என்று அழைக்க வேண்டும் என்றும் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சில திமுக சீனியர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

“திமுகவின் தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் ஏற்று ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனால் திமுகவில் இன்னும் பலரும் அவரை தளபதி என்றே அழைத்து வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி தளபதி என்றே அழைத்து பழக்கப்பட்டுவிட்டதால் தலைவர் என்ற வார்த்தைக்கு முன்னர் தளபதி என்ற அடைமொழியே அவர்களுக்கு தங்களை அறியாமல் வந்துவிடுகிறது. அதேநேரம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை எல்லாரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள்.

இது இரண்டுமே ஸ்டாலின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் ஜோதிடர்களிடம் ஆலோசித்தபோது, ‘தலைவர் என்ற சொல்தான் முதன்மையானது. தளபதி என்ற சொல் இரண்டாம் நிலையையே குறிக்கும். திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது ஸ்டாலின் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தார். அதனால் ஸ்டாலினை அப்போது தளபதி என்று அழைத்தோம். ஆனால் அவர் தலைவரான பின்னும் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் தளபதி என்றே அழைப்பதன் மூலம் தொண்டர்களின் எண்ண அலைகளில் அவர் இன்னும் இரண்டாம் இடத்திலேயே இருப்பதாக அர்த்தம். ஒரு சொல்லை திரும்பத் திரும்ப சொல்வதால் அந்த சொல்லுக்கு சக்தி கிடைக்கும் என்பது ஆன்மீகத்தில் முக்கியமான விஷயம். அதனால்தான் இறைவனின் நாமங்களை ஆயிரம் முறை, லட்சம் முறை ஜெபிக்கச் சொல்கிறார்கள். இதேபோல ஸ்டாலினை இனியும் தளபதி என்று அழைக்காமல் தலைவர் என்றே அனைவரும் அழைப்பதன் மூலம் தலைவர் என்ற சொல்லுக்கு சக்தி கிடைக்கும்’ என்று சொல்லியுள்ளார்கள்.

இதையடுத்து திமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு இனி ஸ்டாலினை தலைவர் என்றே சுவரொட்டிகளிலும், விளம்பரங்களிலும் உச்சரிப்புகளிலும் அழைக்க வேண்டும். அதையடுத்து உதயநிதியை தளபதி என்று அழையுங்கள்’ என்று வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது” என்கிறார்கள்.

இதை மெய்ப்பிக்கும் விதமாக திமுக இணையதள நண்பர்கள் முகநூல் பகுதியில், “கழக உடன்பிறப்புக்கள் வரவேற்பு விளம்பரங்களில் தலைவரை இனி, தளபதி என்று அழைக்க வேண்டாம். தம்பி உதயநிதியே தளபதி” என்று பதிவிட்டுள்ளார்கள்.

ஆக இனி திமுகவில் தளபதி உதயநிதிதான்!


மேலும் படிக்க

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!


அதிமுகவுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு!


பதவியிலிருந்து நீக்குவேன்: நிர்வாகிகளை எச்சரித்த தினகரன்


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


திங்கள், 22 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon