மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!

ஓ.பன்னீருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: டெல்லி அவசரப் பயணம் பின்னணி!

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 21) மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது. கடைசி நாளான நேற்று வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீது துணை முதல்வர் பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். இன்னும் சில நாட்களில் வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கவுள்ள சூழலில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவசர பயணமாக இன்று மாலை 6.55 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இது தனிப்பட்ட பயணம் என்றே கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் டெல்லி செல்வதன் பின்னணி குறித்து விசாரித்தோம். “பன்னீர்செல்வம் சிகிச்சை மேற்கொள்வதற்காக விரைவில் வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். டெல்லியில் அது சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வர இருக்கிறார்” என்கிறார்கள். ஏற்கனவே முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த பன்னீர்செல்வம், கோவையிலுள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகனுக்கு திமுக தந்த அதிர்ச்சி - வேலூர் திருப்பம்!


அத்தி வரதர்: கலெக்டரை கண்டித்த முதல்வர்


ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!


அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! - 2


ஞாயிறு, 21 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon