_லேடி மைக்கேல் ஜாக்சன் போட்ட ஆட்டம்!

public

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் லக்ஷ்மி படத்தின் புதிய பாடல் ஒன்று நேற்று (ஜூன் 27) வெளியாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கும் லக்ஷ்மி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே வெளியான டீசரில் சிறுமி தித்யா பான்டே நடனப் பயிற்சி எடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகியிருந்தது. தற்போது வெளியாகியுள்ள ‘மொரக்கா’ பாடல் முழுக்க அவரது நடனத்திறமையை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

*“ஹேய் நான் மைக்கேல் ஜாக்சி நிலவு நிலவுன்னு காட்டட்டா*

*ஹேய் நான் ஹிருத் ரோஷி வளைவு நெளிவு அதை சேர்க்கட்டா*

*ஹேய் நான் பாரிஸ் நிகோவி நடக்கும் நடையே ஒரு பேலக்கா*

*ஹேய் நான் பிரபுதேவி கடக்கு மொடக்கு என தடக்கு படக்கு என*

*வச்சா அடி வச்சா”*

என நீளும் இந்தப் பாடலின் வரிகள் இசைக்கும் ஓசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. வீட்டில், பள்ளியில், சாலையில் எங்கும் நடனமாடிக்கொண்டே இருக்கும் தித்யா பான்டேவை மையமாக வைத்தே படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக யூகிக்க முடிகிறது.

பிரபுதேவா நடனத்திற்கு என்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பால் புகழ்பெற்றவர். இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளதால் படத்திற்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

சாம் சி.எஸ் இசையமைக்க இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். கோவை சரளா பள்ளி முதல்வராக நடித்துள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரமோத் பிலிம்ஸ், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[‘மொரக்கா’ பாடல்](https://www.youtube.com/watch?v=_1yLZKVwFo0)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *