[சென்னையில் நடமாடும் அம்மா உணவகம்!

public

சென்னையில் நடமாடும் அம்மா உணவக வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 4) தலைமைச் செயலகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தின்போது அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் பசியின்றி வேலை செய்யும் நோக்கில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைந்த விலையில் உணவு வழங்க நடமாடும் அம்மா உணவகத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டு வந்தது.

இந்த சூழலில் முதற்கட்டமாக இன்று மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நடமாடும் உணவகங்கள் வடசென்னை, தென்சென்னை மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளடைவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்தச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள் பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இந்த நடமாடும் உணவக வாகனங்கள் செயல்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் ஏற்கனவே 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், திட்டத்தை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *