கிச்சன் கீர்த்தனா: பீர்க்கங்காய் பருப்புக் கூட்டு

public

அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை. குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம், குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, ஐங்குறுநூறு, நற்றிணை உட்பட பல்வேறு இலக்கியங்களிலும் இடம்பிடித்திருக்கும் பீர்க்கங்காய்க்கு காய்கறிகளில் தனியிடம் உண்டு.

**தரமானது எது?**

பார்ப்பதற்கு பச்சைப் பசேல் என்று இருக்க வேண்டும். அடிப்பகுதி மட்டும் குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றல் என்று அர்த்தம்.

**என்ன தேவை?**

பீர்க்கங்காய் – 1

பாசிப் பருப்பு – மூன்றரை டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3

பச்சைமிளகாய் – 1

நெய் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ச்சிய பால் – கால் கப்

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பீர்க்கங்காயின் தோலை நீக்கவும் (இந்த தோல் பகுதியையும் தனியே சுவைக்கலாம்). தோல் நீக்கிய பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் பாசிப்பருப்பு, பீர்க்கங்காய், மஞ்சள் தூள், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம் சேர்க்கவும். அத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து உப்பு சேர்த்து கிளறி, காய்ச்சிய பால், கறிவேப்பிலை, நெய், சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

**என்ன பலன்?**

நார்ச்சத்துகள் நிறைந்த நீர்க்காயான பீர்க்கங்காய் பெரியவர்களின் ஜீரணத்துக்கு உகந்தது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கல்லீரலைப் பாதுகாக்கும். தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காய்கறிகளில் பீர்க்கங்காயும் ஒன்று.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: பன்னீர் மகனுக்கு எடப்பாடி போட்ட தடை!](https://minnambalam.com/k/2019/07/26/76)**

**[முத்தலாக்: எடப்பாடி- ஓ.பன்னீர் முரண்பாடு?](https://minnambalam.com/k/2019/07/26/29)**

**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**

**[ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/24/68)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *