ராமநாதபுரத்தில் விமான நிலையம்: ஓபிஎஸ் வாக்குறுதி!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக இந்த தேர்தலில் ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ள ராமநாதபுரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர் செல்வம் களமிறங்குகின்றனர்.

ஓபிஎஸ் தினமும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பலா பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் ராமநாதபுரத்தில் தங்கி இருந்து அவருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று அம்பலவாணனேந்தல், பெருமருதூர், பாண்டிப்பத்திரம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, பொன்பேத்தி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது வாக்களர்களுக்கு சில முக்கிய வாக்குறுதிகளை ஓபிஎஸ் அளித்தார். அதன்படி, “மீனவர்களுக்கு உதவும் வகையில் கடலோர கிராமங்களில் பெட்ரோல், டீசல் பங்க் அமைத்துத் தரப்படும்,  இலங்கையால் கைப்பற்றப்பட்ட 375 படகுகள் மீட்கப்படும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், மீனவர்களின் உயிர்காக்கும் “கடல் ஆம்புலன்ஸ்” சேவை ஏற்படுத்தப்படும், மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துத் தரப்படும்,

இராமேஸ்வரம், திருவாடனை, திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலாத்தலமாக்கப்படும், புதிய இரயில் சந்திப்பு நிலையங்கள் அமைத்துத் தரப்படும், கால்நடை பூங்கா மற்றும் கால்நடை கல்லூரி அமைத்துத் தரப்படும், விமானநிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும், ஆழ்துளை கிணறுகள் மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிரடியாக குறைந்த தங்கம்: எவ்வளவு தெரியுமா?

கச்சத் தீவு… கடற்கரைத் தொகுதிகளில் ‘இறங்கி’ வேலை செய்யும் பாஜக

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *