பிரதமர் மோடிக்கு எதிரான புகார்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஏப்ரல் 21ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, “மக்களின் செல்வத்தை பறித்து அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கும், நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் காங்கிரஸ் பகிர்ந்தளித்துவிடும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தன.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
அதுபோன்று பிரதமர் மோடி பேசிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்” என்று பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானது.
மறுபக்கம் தேர்தல் ஆணையத்தில் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக புகார்கள் குவிந்த வண்ண்ம் உள்ளன.
மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இந்தியா, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) நிறுவனர் ஜக்தீப் எஸ் சோகர் உள்ளிட்ட பலர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மின்னஞ்சல் வாயிலாகவும் நாடுமுழுவதிலிருமிருந்து புகார்கள் வந்துள்ளன. அதன்படி 20,000 புகார்கள் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பான புகார்களை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Aparna Das: களைகட்டிய திருமணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள்!
எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது காங்கிரஸ் : மோடி