சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வந்தது என்று ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் அபிஷேக் ஜா குற்றம் சாட்டியுள்ளார். bihar assembly reservation gazette
பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களை நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு நவம்பர் 7-ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
அப்போது பிகாரில் தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவிகித இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும்,
பழங்குடியினர்களுக்கு 2 சதவிகிதம், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் என 75 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று அறிவித்தார்.
இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா பிகார் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அர்லேகர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
மசோதாவிற்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதாவை எங்கள் ஆதரவு இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் அரசால் நிறைவேற்ற முடிந்திருக்காது என்று பிகார் பாஜக உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜேடியு செய்தி தொடர்பாளர், அபிஷேக் ஜா கூறும்போது,
“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. இருப்பினும் வெற்றிகரமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளோம்.
சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக அரசு தீட்டிய திட்டத்திற்கு பாஜக சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். bihar assembly reservation gazette
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: மறந்தும்கூட ஃப்ரிட்ஜில் இந்த உணவு வகைகளை வைத்து விடாதீர்கள்!
கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை?