படிப்பில் மட்டுமின்றி மது குடிப்பதிலும் கேரள மக்கள் உச்சம் தொட்டுள்ளனர். கடந்த நிதியாண்டில் கேரளாவில் வரலாறு காணாத வகையில் ரூ.19,088 கோடி மதிப்புக்கு மது விற்பனையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 2022-23-ம் ஆண்டில் 18,510.98 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாகவும், மதுபான விற்பனை மீதான வரி மூலம் அரசு கருவூலத்துக்கு ரூ.16,609.63 கோடி கிடைத்துள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் மதுபான கழகத்துக்கு சொந்தமாக 277 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நுகர்வோர் மத்திய வங்கியின் கீழ் 39 விற்பனை நிலையங்கள் உள்ளன. கேரளா மாநிலத்தின் 3.34 கோடி மக்கள் தொகையில் 29.8 லட்சம் ஆண்களும், 3.1 லட்சம் பெண்களும் மது அருந்துவதாக கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் கேரளாவில் மது குடிக்கின்றனர்.
இத்தனைக்கும் கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் 80 சதவிகிதம் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. 20 சதவிகித மது மட்டுமே கேரளாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!
ஹெல்த் டிப்ஸ்: வெயிலில் போய்விட்டு வீடு திரும்பியதும் இதெல்லாம் செய்யாதீர்கள்!
ஹெச்.ராஜாவுக்கு வார்னிங்… மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
கொளுத்தும் வெயில்: சென்னை, மதுரையில் கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு!