செந்தில் பாலாஜி ஜாமின் மனு!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) தீர்ப்பு வழங்க உள்ளது.
மத்திய அமைச்சர் தமிழகம் வருகை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காளிமலை பத்ரகாளி அம்மன் கோவில் துர்காஷ்டமி திருவிழாவின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் இன்று தமிழகம் வருகிறார்.
நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து!
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்!
தமிழறிஞரும், கவிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளையின் 135வது பிறந்தநாள் இன்று.
மொபைல் முத்தம்மா திட்டம்!
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா என்ற திட்டத்தின் கீழ் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் 516வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லியோ ரிலீஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் புதுப்படம்!
ஜே.எஸ்.சதீஷ்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவை இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, அருண் விஜய்ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர்.
ஐசிசி உலகக் கோப்பை!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 17வது லீக் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…