2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொலைக்காட்சி தொடர் “காதலிக்க நேரமில்லை”. இந்த தொடரில் நடிகர்கள் பிரஜன் மற்றும் சந்திரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த தொடரை விட இந்த தொடரின் பாடல் மிகப்பெரிய ஹிட். “என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு” என்று தொடங்கும் அந்த பாடல் இன்று வரை பலரின் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த தொடரின் நாயகனாக நடித்த பிரஜன், பழைய வண்ணாரப்பேட்டை, டி3, நினைவெல்லாம் நீயடி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நடிகை சந்திரா தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் நடிகை சந்திரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் தொடரான கயல் தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக நடிகை சந்திரா கமிட் ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது.
நடிகை சந்திரா மீண்டும் சின்னத்திரையில் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை அறிந்த 90டீஸ் கிட்ஸ் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வசூல் “ஸ்டார்” கவின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா..?
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக CSK-வின் ஸ்டீபன் பிளெமிங்?
புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?
ஜூன் மாதம் தொடங்கும் சூர்யா 44… ஷூட்டிங் எங்க தெரியுமா..?