12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி நிவேதாவை கனிமொழி எம்.பி. இன்று நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவில் 94.56 சதவீத மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். சென்னை லேடி வெல்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிவேதா என்ற திருநங்கை மாணவி அறிவியல் பாடப்பிரிவில் படித்து இவர், 283 மதிப்பெண் பெற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
திருநங்கை மாணவியின் இந்த சாதனையை பலரும் பாராட்டினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமு கழக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநங்கை மாணவி நிவேதாவை சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொளுத்தும் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்: 13 மாவட்டங்களில் இன்று கனமழை!
உபா வழக்கு: நியூஸ் கிளிக் நிறுவனர் விடுதலை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!