பங்குச் சந்தை: விழுவது யார்? எழுவது யார்? எந்த பங்கு வாங்கலாம்?

Published On:

| By Aara

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று (மே 14) செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 328.48 புள்ளிகளும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 113.80 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவடைந்தது.

தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நான்காவது காலாண்டில் நிகர லாபம் ரூ.2,072 கோடியாக உள்ளதாக தெரிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய 3006 கோடி வருவாயை ஈடு செய்யும் போது இது 31% குறைவு என்று தெரிவித்திருந்தாலும்,லாப அடிப்படையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் பங்கிற்கு 8 ரூபாய் டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

ஜாம்நகர் SME IPO எதிர்பார்க்கப்பட்டதை விட 387%  அதிகமான அளவு விற்பனை ஆகி உள்ளது.இது இந்த ஆண்டின் 15வது மல்டிபேக்கர் பங்கு பட்டியலில் இணைந்துள்ளது.

பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் கடந்த ஆண்டை விட 22% குறைந்து 206 கோடியை லாபமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 28% லாபம் உயர்ந்து ரூ.526 கோடியை ஈட்டியதாகவும். ஒரு ஈக்விட்டி பங்கிற்கு 55 ஈவுத்தொகை (Dividend) வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அப்பல்லோ டயர்ஸ் நிறுவன மேலாண்மை குழு ஒரு ஈக்விட்டி பங்கிற்கு  6 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரைத்துள்ளது.

இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 5,000 ரூபாயைத் தாண்டியதால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியை எட்டியது.

இன்று என்ன முக்கியத்துவம்?

கோ டிஜிட்  நிறுவனத்தின் ஐபிஓ (Initial Public Offering) இன்று திறக்க உள்ளது. அதாவது ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு வழங்குவதுதான் ஐபிஓ. பொது முதலீட்டாளர்களிடமிருந்து பங்கு மூலதனத்தை திரட்டத் தொடங்குவதுதான் இந்த நடவடிக்கை.
மே 17 வரை விற்பனையில் இருக்கும் இந்த‌ ஐபிஓ மூலமாக 1125 கோடி ரூபாயை திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Go Digit General Insurance Limited வாகனக் காப்பீடு, உடல்நலக் காப்பீடு, பயணக் காப்பீடு, சொத்துக் காப்பீடு, கடல்சார் காப்பீடு, பொறுப்புக் காப்பீடு மற்றும் நுகர்வோர் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு ஏற்றவாறு பிற காப்பீடுகளை வழங்கும்  நிறுவனமாகும்.

மேலும், ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ் ஐபிஓ இன்று சந்தையில் பட்டியலிடப்படுகிறது. முதல் நாள் இன்று புதன்கிழமை சந்தையில் சுமார் 380 ரூபாய்க்கு பட்டியலிடப்படும் என்று சந்தை கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இன்றைய வர்த்தகத்தில் சீமென்ஸ், சிப்லா, ஏர்டெல், மேன்கைண்ட், பதஞ்சலி ஃபுட்ஸ், பிஏஎஸ்எஃப் இந்தியா நிறுவன பங்குகள் அதிக கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் Dixon Technology, Barti Airtel, Hindustan Copper Ltd ஆகிய பங்குகள் குறுகிய கால லாபத்திற்கு ஏற்ற பங்குகள் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

சென்னை – மதுரை : கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி!

மம்மூட்டி படத்தை இயக்கும் கௌதம் மேனன்?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel