பியார் பிரேமா காதல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சில கலவையான விமர்சனங்கள் ஸ்டார் படத்திற்கு கிடைத்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.
20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஸ்டார் திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டார் படத்திற்கு முன்பாக கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருந்தது.
ஆனால் தற்போது ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பது இயக்குநர் இளன் மற்றும் நடிகர் கவினின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் இயக்குநர் சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக அளவில் வசூல் செய்து வந்தாலும், கவினின் ஸ்டார் திரைப்படம் தடுமாறாமல் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
ஸ்டார் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி உள்ளது.
அமேசான் பிரைம் நிறுவனத்தின் ஒப்பந்தம்படி படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பது தான்.
அதாவது வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி கவினின் ஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கவினின் ஸ்டார் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?
சென்ட்ரல் டூ ஏர்போர்ட் : மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…
ஜூன் மாதம் தொடங்கும் சூர்யா 44… ஷூட்டிங் எங்க தெரியுமா..?
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலைவாய்ப்பு நிறுவனம்!