பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
பெண் காவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சவுக்கு சங்கர்.
அவர் மீது சென்னை, கோவை, தேனி என பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் யாஸ்மின் அளித்த புகாரின் பேரிலும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் திருச்சி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், பாலின சமத்துவம் இல்லாமல் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான அந்த வீடியோ தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்தார்.சங்கர் பேசியதை வேண்டுமென்றே ஃபெலிக்ஸ் ஜெரால்ட் வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் நேற்று திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி சிறையில் பெலிக்ஸ்… நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்நிலையில் இவ்வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
வாகனம் முழுவதும் பெண் காவலர்கள் மட்டும் அடங்கிய பாதுகாப்பு குழுவோடு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த, பெண் காவலர்களால் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்படும் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சந்திரா… எந்த சீரியல் தெரியுமா?