ஈரோட்டில் எடப்பாடி நடத்திய அவசர ஆலோசனை!

அரசியல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 8 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர்.

இரண்டு தரப்பும் வேட்பாளரை களமிறக்கும் பட்சத்தில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை முடக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற நகர்வுகள் மூலமாக தற்போது எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற்று இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை (பிப்ரவரி 9 ) நடைபெற உள்ள நிலையில் இன்று (பிப்ரவரி 8 ) முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, வேலுமணி, உதயகுமார், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பரோட்டா மாஸ்டரான செஞ்சி மஸ்தான்: இஸ்த்ரி மேனான ஆர்.பி.உதயகுமார்

சீட்டுகட்டாய் சரிந்த கட்டிடங்கள் : தவறை திருத்திக் கொள்ளுமா துருக்கி?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *