பரோட்டா மாஸ்டரான செஞ்சி மஸ்தான்: இஸ்த்ரி மேனான ஆர்.பி.உதயகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் எவ்வளவு பரபரப்பாக இருக்கிறதோ, அதேபோன்று சுவரஸ்யமாகவும் பிரச்சார பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

திமுக சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட 11 பேர் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை 117 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து முன்னாள் அமைச்சர்களையும் களமிறக்கியுள்ளார் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இரு தரப்பும் ஈரோடு கிழக்கில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறது.

இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தள்ளுவண்டி கடையில் பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிற்கும் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வார்டு எண் 29க்குப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார் அமைச்சர் மஸ்தான்.

அப்போது திடீரென சாலை ஓரத்தில் இருந்த தள்ளுவண்டி கடைக்கு சென்ற அமைச்சர், அங்கிருந்த தொழிலாளியை நகரச்சொல்லி பரோட்டா போடத் தொடங்கினார்.

சப்பாத்தி கட்டையால் மாவை தேய்த்து, பதத்துக்கு வரும் வரை அதை வீசி எடுத்து, இறுதியாக கல்லில் போட்டு சுட்டு எடுத்தார்.

ஒருகணம் பரோட்டா மாஸ்டர் போல் மாறிய அமைச்சரை பார்த்து அங்கிருந்தவர்கள் வியந்தனர்.

அதுபோன்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கச்சேரி வீதி பகுதியில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அவர், அங்கிருந்த தேநீர்க்கடையில் டீ போட்டு மக்களிடம் கொடுத்தார்.

பின்னர் துணி தேய்க்கும் கடைக்கு சென்ற அவர் துணி தேய்த்தும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அவரின் இந்த செயல் அங்கிருந்த மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

பிரியா

“உங்கள் தந்தையாக சொல்கிறேன்”: புதுமைப் பெண் திட்டத்தில் முதல்வர் பேச்சு!

கலைஞர் பேனா சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் மனு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts