caa amendment act Edappadi Vijay condemn

பிளவுபடுத்தும் அரசியல்: சிஏஏ சட்டத்திற்கு எடப்பாடி, விஜய் எதிர்ப்பு!

அரசியல்

caa amendment act Edappadi Vijay condemn

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சிஏஏ சட்டத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், சிஏஏ சட்டம் இந்தியாவில் அமலுக்கு வந்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இதற்கு காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், சிஏஏ சட்டம் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.

அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது.

இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் caa amendment act Edappadi Vijay condemn

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: அதிக உடற்பயிற்சி ஆண்மையைக் குறைக்குமா?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “பிளவுபடுத்தும் அரசியல்: சிஏஏ சட்டத்திற்கு எடப்பாடி, விஜய் எதிர்ப்பு!

  1. இன்னும் என்னன்ன கொடுமைகளை இந்த இரண்டு பேர்ட்டேந்து அனுபவிக்கனுமோ! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *