ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் RCB அணிக்கு 201 ரன்களை இலக்காக GT நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 28) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைட்டன் அணிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டுபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் சுப்மன் கில் 16 (19) ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய சாருக் ஹான் 58 ரன்களும், டேவிட் மில்லர் 26 ரன்களும் எடுத்தனர்.
அந்த வகையில், 2௦ ஓவர் முடிவில் குஜராத் டைட்டன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.
பந்துவீசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முகமது சிராஜ், ஸ்வாப்னில் சிங் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் போட்டியிடும் குஜராத் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்திலும், பெங்களூரு அணி கடைசி இடத்தில் அதாவது 1௦வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
201 ரன்கள் எடுத்து ராயல் லேசஞ்சர்ஸ் அணி போட்டியை வெல்லுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
VD 12 : அனிருத் இசை இருக்கும் ஆனால் பாடல்கள் இல்லை..!
ஒருபக்கம் மோடி பிரச்சாரம்… மறுபக்கம் காலி சொம்புடன் சித்தராமையா டி.கே.சிவக்குமார் தர்ணா!