நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என இன்று (ஏப்ரல் 17) ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இன்று (ஏப்ரல் 17) உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
மக்கள் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியோ, பாஜகவினரோ இதுவரை எதுவும் பேசவில்லை. மக்களின் எந்த பிரச்சனையையும் பாஜகவினர் தீர்க்கவில்லை.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. பிரதமர் மோடி ஊழலின் சாம்பியன் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பாஜக ஊழல்வாதிகளை மட்டும் தங்கள் கட்சியில் வைத்திருக்கவில்லை, ஊழல் பணத்தையும் வைத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அளவில் பணம் பறிக்கும் திட்டம்தான் தேர்தல் பத்திரம் திட்டம். அதன்மூலம் பாஜகவினர் அதிக அளவிலான பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1780457516352065538
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பொது நிறுவனங்களான வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை அவர்களுக்காக வேலை செய்யும் நிறுவனங்களாக மாற்றிவிட்டனர்.
10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக எந்தவித நலத்திட்டங்களையும் மக்களுக்காக செய்யவில்லை. பாஜகவின் செல்வாக்கு மக்களிடம் சரிந்து வருகிறது.
தற்போது மக்களிடம் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான அலை வீசுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த பிரசாந்த்: கைகொடுத்த “நான் முதல்வன்” திட்டம்!
Thangalaan: ஆஸ்கர் உறுதி! ‘சீயான்’ விக்ரமின் பர்த்டே ட்ரீட்… புது வீடியோ ரிலீஸ்!