நடிகர் விக்ரமின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 17) கொண்டாடப்படும் நிலையில், ‘தங்கலான்’ திரைப்படத்தின் பரபரப்பான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களில் ஒருவர் விக்ரம். எந்த கேரக்டரை கொடுத்தாலும் தனது முழு உழைப்பையும் கொடுக்கக் கூடியவர்.தற்பொழுது விக்ரம் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். முற்றிலும் புதிதான இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி போன்ற பலர் இதில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. விக்ரமின் பிறந்த நாள் என்பதால், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் படத்தின் மேக்கிங் வீடியோவை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். புழுதி பறக்க, அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.
‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம் போட்டிருக்கும் உழைப்பைப் பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். கே.ஜி.எப் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக விக்ரம் 30 கிலோ வரை எடை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ பார்த்த ரசிகர்கள் ‘விக்ரமின் உழைப்பிற்கு ஆஸ்கர் விரைவில் கிடைக்கும், அவரின் உச்சகட்ட நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்’ என்று வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘தங்கலான்’ நிச்சயம் பல விருதுகளைக் குவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிக்கலில் ஹர்திக் பாண்டியா… டி20 உலகக்கோப்பையில் இடம் பிடிப்பாரா?
திருநங்கையாக நடிக்கும் சிம்பு.. இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே..?!
முடிவுக்கு வரும் பிரபல சீரியல்… ரசிகர்கள் ஏமாற்றம்… இதுதான் காரணமா?