இந்தியாவிற்கு ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும் என இன்று (ஏப்ரல் 15) ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 2௦ தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 15) ரோட் ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார்.
ரோட் ஷோ நிறைவில் வயநாடு தொகுதி மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியா என்பது ஒரு பூங்கொத்து போன்றது. அதில் உள்ள ஒவ்வொரு பூவையும் மதிக்க வேண்டும். ஏனெனில் அது மொத்த பூங்கொத்திற்கும் அழகு சேர்க்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் முக்கியமானவர்கள் தான். ஆனால், நாட்டில் ஒரே தலைவர் என்ற கருத்தை பாஜக திணிக்கிறது. இந்தியாவிற்கு ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணம் ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயலாகும்.
இந்தியா என்பது மதசார்பற்ற நாடு. இந்தியாவில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். பாஜகவின் கருத்துப்படி பார்த்தால், இந்தியாவில் பல தலைவர்கள் இருக்கக்கூடாதா?
இந்த எண்ணம்தான் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு உள்ள முக்கிய வேறுபாடு ஆகும். நாட்டு மக்களுக்காக காங்கிரஸ் உழைக்கிறது. நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கை, மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றை நேசிக்கிறது மற்றும் மதிக்கிறது. ஆனால், பாஜக அப்படி இல்லை, மக்களிடம் எதையாவது திணிக்க முயற்சிக்கிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் படி செயல்படுகிறது. அதன் வழியில் நடக்கவா நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம். இந்தியாவை இந்திய மக்கள் அனைவரும் ஆள வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவை உடைக்க நினைக்கும் திட்டம் பலிக்காது : எடப்பாடி பழனிச்சாமி
“GST: வரி அல்ல… வழிப்பறி” : புள்ளிவிவரத்துடன் ஸ்டாலின் விமர்சனம்!