பழைய ஓய்வூதிய திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்!

பஞ்சாப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பஞ்சாப்பில் முதல்வா் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் கட்சி தேர்தல் வாக்குறுதியின்போது, ’மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்’ என தெரிவித்திருந்தது.

முன்னதாக ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தது.

இந்த நிலையில் பஞ்சாப்பில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதல்வா் பகவந்த் மான் தலைமையில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிடப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டம் 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ், அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறுவார்.

ஜெ.பிரகாஷ்

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத செல்கிறீர்களா?: ஒரு நிமிடம் இதை கவனியுங்க!

பாரதியார் மருமகனை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts