அதிமுக வழக்கு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் இன்று (மார்ச் 24) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிற்காக பட்டியலிடப்படவில்லை.
ஜி20 கூட்டம்!
சென்னையில் இன்று ஜி20 தொடர்பான நிதிசார் கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் தொடங்குகிறது.
ரம்ஜான் நோன்பு!
இன்று முதல் தமிழகத்தில் புனித ரம்ஜான் மாத நோன்பு தொடங்குகிறது
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை!
மின்வாரிய நிதி பிரிவு அதிகாரிகளுடன் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் ஈடுபடுகின்றனர்.
சட்டமன்றம் முற்றுகை போராட்டம்!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 307-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லைகா அப்டேட்!
லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
பெண்கள் பிரிமியர் லீக் போட்டி!
பெண்கள் பிரிமியர் லீக் டி20 ப்ளே ஆஃப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் உபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் 517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வானிலை நிலவரம்!
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வால் தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிச்சன் கீர்த்தனா: மில்க் கேசரி
நான் உங்களுடன் நிற்கிறேன்: ராகுலுக்கு கமல் ஆதரவு!