தளபதி விஜயின் 68-வது திரைப்படமாக GOAT (Greatest Of All Time) திரைப்படம் அமைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தற்போது ரஷ்யா சென்றுள்ளது.
இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ஜெயராம், சினேகா, மைக் மோகன், பிரஷாந்த், பிரபுதேவா, லைலா என பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ திரைப்படமும் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் ரிலீஸ் ஆகியுள்ளது.
நடிகர் அஜித்குமாரின் கேரியரில் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதோடு தல ரசிகர்கள் இன்றுவரை கொண்டாடும் திரைப்படமாகவும் மங்காத்தா இருக்கிறது.
அதேபோல தளபதி விஜயின் ‘GOAT’ திரைப்படமும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆக இருப்பதால், இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: நல்லா வாழ்ந்தவன் ‘கெட்டு’ போகக்கூடாது… தெறிக்கும் மீம்ஸ்கள்!
ஏப்ரல் மாத மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையா? : சத்யபிரதா சாகு பதில்!
Thalapathy 69: டிவிவி போனா என்ன?… துணிந்து களமிறங்கும் விஜய்… தயாரிப்பாளர் யாருன்னு பாருங்க!