விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து நல்ல நேரமாக இருக்கிறது. காரணம் நேற்றைய (ஏப்ரல் 11) தினம் தளபதி 68-வது படமான GOAT திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.
இந்நிலையில் உடனே மீண்டும் ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அதாவது தளபதி நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றிய, மிக முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் முழு நேர அரசியலில் களமிறங்கியதால், 69-வது படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தாலும், அந்த கடைசி திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார்? என்ற கேள்வி நிலவி வந்தது.
தற்பொழுது அதற்கான விடை கிடைத்து விட்டது. பலரும் எதிர்பார்த்த வண்ணம் இயக்குனர் ஹெச் வினோத் தான் இந்த படத்தை இயக்க இருக்கிறாராம். அதோடு இந்த திரைப்படத்தை தளபதி விஜய்யே தனது சொந்த செலவில் தயாரிக்க உள்ளார் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.
இதனால் டிவிவி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தில் இருந்து வெளியேறினாலும் கூட, தளபதி ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழில் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அறிமுகமான ஹெச்.வினோத், அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனர்களின் பட்டியலில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபல தமிழ் வில்லன் நடிகர் மரணம்… திரையுலகினர் சோகம்!
மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது!
ஜோஹோ நிறுவனருக்கு புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!