ஏற்காடு சாலை விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்!

Published On:

| By indhu

Yercaud road accident: EPS personally consoles the injured

ஏற்காடு சாலை விபத்தில் காயமடைந்தவர்களை இன்று (மே 4)  எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, 11வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதன் காரணமாக, பேருந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!

”மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வையை ஸ்ரீகாந்த் மாற்றும்” : ஜோதிகா நம்பிக்கை!